Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,அஹமட் அனாம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்கல் பிரிவினால் அமுல்படுத்தப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட சூடுபத்தினசேனைப் பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இத்திண்மக்கழிவு நிலையம் 16 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் கழிவுப்பொருட்களை சேகரித்து பின்னர் தரம் பிரித்து அவற்றினை பசளை தயாரிக்கும் நிலையமாக செயற்படவுள்ளது.
இந்நிலையம் திறக்கப்படுவதன் மூலம் வாழைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி போன்ற பிரதேச சபை பிரிவுகளிலுள்ள சுகாதாரம் பேணப்படுவதுடன், டெங்கு நுளம்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தயாரிக்கப்படும் பசளையானது அவ்வப்பகுதி பிரதேச விவசாய திணைக்களங்களின் ஊடாக விவசாயிகளுக்கு சேதனப் பசளையாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சி.சிவகுமாரன் தெரிவித்தார்.
மேற்படி நிலையத்தில் வாழைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி போன்ற பிரதேச சபை பிரிவுகளின் கிடைக்கப்பெறும் திண்மக் கழிவுப் பொருட்கள் சேரிக்கப்பட்டு அவை குறித்த நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு பசளை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago