Suganthini Ratnam / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; மட்டக்களப்புக்கான விஜயத்தை முன்னிட்டு 'சுத்தமான நகரம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், ஏறாவூர் நகர பிரதான நெடுஞ்சாலையின் இரு மருங்குகளையும் சுத்தம் செய்யும் செயற்றிட்டத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து இன்று (26) ஈடுபட்டனர்.
ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினால் ஏறாவூர் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலில் இந்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக ஏறாவூர் நகரின் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மருங்குகளில் வடிகான்கள், மதகுகள், கவனிப்பாரற்ற பாழடைந்த கட்டடங்களின் பகுதிகள் என்பன சுத்தம் செய்யப்பட்டன.
இந்த 'சுத்தமான நகரம்' செயற்திட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினர், இலுப்படிச்சேனை படை முகாமிலுள்ள இராணுவத்தினர் உள்ளிட்டோரும் சுகாதாரத் திணைக்களத்தினரும் பங்குபற்றியுள்ளனர்.

1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago