2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'சேவைகள் சென்றடைவதற்காகவே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன'

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் அவர்களை சென்றடையச் செய்வதற்கே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப்பிரிவின் பணிப்பாளர் வை.எல்.பாரூக் தெரிவித்தார்.

சேவைகள் வழங்கும் அமைப்புகள் சட்ட ரீதியான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும்போது அது முறையாக செயற்படுத்தும் நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மின்சார சபை மூலம் பெறப்படும் நன்மைகளை பொதுமக்கள் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் அறிவுறுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலும் இந்த செயற்பாடுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மின்சாரபெறும் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் இதன்போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப்பிரிவின் பணிப்பாளர் வை.எல்.பாரூக் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இந்த செயலமர்வில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகாரப்பிரிவின் உதவி பணிப்பாளர் லசந்த ரத்துவிதான, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு மேலதிக பணிப்பாளர் கே.கிரிஷானந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தமிழ் பேசும் கிராம நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மின்சார சபை மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X