2025 மே 14, புதன்கிழமை

'ஜனநாயகம் தழைப்பதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை வழங்கியமை  மூன்று தசாப்தகாலத்தின் பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம் மீண்டும் தழைப்பதற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம.;ஐ.எம் தஸ்லிம் தெரிவித்தார்.

முதிர்ந்த  அரசியல்வாதியான இரா.சம்பந்தன் இந்த நாட்டில் சிறுபான்மை இன மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் நடவடிக்கையில் பேதமின்றி செயற்படுவாரென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், '1978ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தம் இந்த நாட்டில் மீண்டும் சிறுபான்மை இனம் எதிர்க்கட்சிப் பதவியைப் பெறமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இம்முறை இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதையடுத்து  தமிழ்த் ;தேசியக் கூட்டமைப்பு இரண்டாம் நிலையில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொண்டபோதிலும்   சிறுபான்மைக்கட்சி என்ற ஒரே காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொள்ள முடியாதளவிற்கு இனவாதிகளின்; வீச்சு காணப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோரின் துணிச்சலான முடிவினால், இந்த நாட்டிலுள்ள  ஜனநாயகவாதிகளுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அரசாங்கத்தின்  இச்செயற்பாடு கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதியுடன் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சிக்கு; வலுச் சேர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த சுமார் 65 வருடகாலமாக இந்த நாட்டின் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்திருந்த தமிழ் மக்களுக்கு புத்துணர்வூட்டியுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X