Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சம காலத்தில் தகவல் தொழில்நுட்பமும் தாய்மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் மாணவர் சமுதாயத்துக்கு இன்றியமையாதவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற விளையாட்டு மற்றும் கல்வி உட்பட புறக்கிருத்திய தேர்ச்சிகளில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, அப்பாடசாலையில் பாடசாலை அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், 'தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பல சாதனைகளை இலகுவாக அடையக் கூடியதாகவுள்ளது.
ஆயினும், எமது நாட்டிலுள்ள பட்டதாரிகள் இன்னமும் வேலையற்ற பட்டதாரிகள் என்ற பதத்தோடு வீதிக்கு வந்து போராடி அரசாங்க வேலை பெறுவதிலேயே ஆர்வம் காட்டும் மனோநிலை எமது கல்வித் திட்டத்திலுள்ள குறைபாடே அன்றி வேறில்லை.
சிறந்த மொழியாற்றலும் தொழில்நுட்ப அறிவுமிருந்தால் இந்த தொழில்நுட்ப யுகத்தில் நீங்கள் வேலைவாய்ப்புக்கோ, வருமானம் ஈட்டுவதற்கோ அஞ்ச வேண்டிய தேவை இல்லை. ஆனால், இவற்றை அறியாதவர்களாக சரியான திட்டமிடலின்றி நாம் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்.
இன்னமும் ஆக, அற்பமான பொருட்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஏன் நமது சிந்தனைத் திறன் எங்கே போனது?
இந்த சிந்தனை மாற்றியமைக்கப்பட வேண்டும். நவீன தொழினுட்ப வசதிகளை நமது வாழ்க்கையை நாசமாக்குவதற்குப் பயன்படுத்துவதை விட அதிகம் அதிகம் சாதிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டால் அதனால் வீடும் நாடும் சுபீட்சமடையும்.
பட்டாதாரிகள் தெருக்களில் வந்து குந்தயிருந்து வேலை கேட்டுப் போராட்டம் நடத்தும் நிலைமையும் மாறும்.' என்றார்.

8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago