Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கக்கூடாது என்பதில் கூட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட நாவற்கேணி கண்ணகி வித்தியாலயத்துக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாங்கள் தமிழர்கள் நியாயமான தீர்வினைப் பெற்று எங்களது அபிலாஷைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் இந்த கூட்டு எதிர்க்கட்சி மிகவும் தீவிரமாகவுள்ளது.
நல்லாட்சி என்னும் தேசிய அரசாங்கத்தினை கவிழ்க்கவேண்டும் என்ற ரீதியில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. எனவே, தமிழ் பேசும் சமூகத்தின் எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டுள்ள இவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் ஆதரவினை வழங்கவேண்டாம். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழ் பேசும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த நல்லாட்சியில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆட்சிக்காலத்திலேயே கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலங்களைவிட மிக அதிகமான நிதி கல்விக்கு இந்த ஆட்சிக்காலத்திலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 1100 பாடசாலைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட பாடசாலைகள் இந்த நிதி மூலம் அபிவிருத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் கொள்கையினை நிறைவேற்றும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றது. அபிவிருத்தியை விட எமது அபிலாஷைகள் மிக முக்கியத்துவமானது. அதனை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் சென்றுகொண்டுள்ளோம்' என்றார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago