2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நரி' தப்பியமை சூடுபிடிப்பு: காவலுக்கு நின்றவர் நீக்கம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பித் தலைமறைவாகியுள்ள மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியைச் சேர்ந்த 'நரி' என்று அழைக்கப்படும் மீன் வர்த்தகருக்காக, பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்;, உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இளைஞர்களைத் தாக்கிய மேற்படி மீன் வியாபாரியும் அவரது ஆதரவாளர் ஒருவரும், கிராமத்திலுள்ள  இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் என மொத்தமாக 8பேர், கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த வியாழக்கிழமை (11), மட்டக்களப்பு

பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

எனினும், கைது செய்யப்பட்ட வர்த்தகர் காயமேற்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தபோது காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி அறிந்துகொண்ட பிரதேச மக்கள், பொலிஸார் தான் அவரை வேண்டுமென்றே தப்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் எனக் கூறி, இரவோடிரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தப்பிச் செல்லவிடப்பட்ட வர்த்தகர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் ஆக்ரோஷம் வெளியிட்டனர்.

கிராம மக்களின் அழுத்தம் காரணமாக, தலைமறைவாகிய மீன் வியாபாரியைத் தேடும் பணியில், பொலிஸ் அணியொன்று கடந்த வியாழக்கிழiமை இரவு முதல் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

திராய்மடு எனும் பிரதேசத்தில் அடாவடித்தனங்கள் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படும் பிரபல மீன் வியாபாரியான டீ சில்வா ஜயசேகர, தனது மனைவியுடன்; தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி பொலிஸார்

விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X