2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சியை கவிழ்ப்பதற்கே பாதயாத்திரை நடத்தப்பட்டது'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் முகமாகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியிலிருந்து பாதயாத்திரையொன்றை முன்னெடுத்தார் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, இனத்துவேசங்களை விதைத்து பெருபான்மை மக்களை சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீண்டிவிடும் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், அம்பிளாந்துறை - கற்சேனை பிரதான வீதி,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 790 ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வேலைகள் சனிக்கிழமை (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்பது பகல் கனவாகும். அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கனவு காண்கின்றார். ஆட்சியமைப்பதும் அதிகாரங்களை பெறுவதும் மக்கள் கையில் உள்ளது என்பதை அவர் மறந்துவிட்டார் போலும்' என்று அவர் இதன்போது கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X