2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சியில் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் உறுதி'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

நல்லாட்சியில் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாகவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் மகளிர் பணியகத்தை திறந்துவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்  அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பெண்கள் மற்றும் சிறுவர்களினது பாதுகாப்பில் நாம் அனைவரும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். இவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு பொலிஸார் உள்ளிட்டோர்  மட்டும் செயற்பட்டு வெற்றி காண முடியாது. அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் பொது அமைப்புகளும் சேர்ந்து அவர்களின் பாதுகாப்புக்காக  செயற்படும்போது, அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்' என்றார்.

'ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் பொலிஸ் நிலையங்களில் தனியான பிரிவாக சிறுவர் மகளிர் பணியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 27 பணியகங்கள்; திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில்; காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இப்பணியகங்கள் திறக்கப்பட்டுள்ளன' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X