Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாட்டின் அடையாளமே காணாமல் போனோருக்கான செயலகம் திறக்கப்படுவதாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காங்கேயனோடை அல் அக்ஸா பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லிணக்கச் செயற்பாட்டை அரசாங்கம் துரிதமாக செயற்படுத்தி வருகின்றது. மேலும், தற்போது அரசாங்கம் அரசியலமைப்பு பேரவையாகச் செயற்பட்டு வருகின்றது. அத்துடன், அரசாங்கம் தகவல் அறியும் சட்டமூலத்தையும் கொண்டு வந்துள்ளது' என்றார்.
காங்கேயனோடை முகமதிய்யா மீனவர் சங்கத்துக்கு 160,000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்துக்கு 75,000 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கிச் சாதனங்களும் காங்கேயனோடை நியூஸ்டார் மற்றும் பதுறியா விளையாட்டுக்கழகங்களுக்கு தலா 40,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும்; காங்கேயனோடை பதுறியா குர்; ஆன் மதரசாவுக்கு 30,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்களும் மற்றும் 06 பேருக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago