2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'நான் இருக்கும்வரை இடமளியேன்'

Thipaan   / 2017 மார்ச் 31 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

"கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்படுமா என்ற கேள்வி, எம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. நான் முதலமைச்சராக இருக்கும் வரைக்கும் இவ்வாறான மதுபானசாலைகள் அமைப்பதற்கு இடமில்லை அவ்வாறு வருவதற்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை" என்று கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோக திட்ட அங்குரார்ப்பண நிகழ்வை, ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ்.வீதியில் நேற்று  மாலை ஆரம்பித்து வைத்து விட்டு, பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில். "மதுபானசாலைக்குரிய முக்கியமான இயந்திரம், துறைமுகத்தில் வந்தடைந்ததாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எது வந்தாலும் நிச்சயமாக இந்த மதுபானசாலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையை கிழக்கு மாகாண  மக்களுக்கு நான் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தவொரு பாரிய அழுத்தங்களும் மத்திய அரசாங்கத்தில் இருந்து வந்தாலும் அவற்றை நிறுத்துவதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ஒரு தீர்மானம் எங்களது மாகாண சபையால் எடுத்து அதனுடைய அறிவுறுத்தலை நாம் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு வழங்கியிருந்தோம். செயலாளர் உடனடியாக நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதிலும்; அந்தத் தொழிற்சாலையை மீண்டும் தொடர்ச்சியாகக் கட்டுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்திருக்கிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப்பாவனையாளர்களின் தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அவற்றை நிறுத்த வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது, வறுமை வீதத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது இடத்தில் உள்ளது.

இந்த மதுபானத்தை நிறுத்த வேண்டிய செயற்பாடு எவ்வாறு உள்ளதோ, அதேபோல் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கு நாம் இவ்விடத்தில் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம். உடனடியாக எந்தவோர் அழுத்தமும் இல்லாமல், இது ஒரு போதும் செயற்படுத்தப்பட முடியாது என்ற விடயத்தை தெரிவித்து கொள்வதோடு, அவர்களும் இதற்கு எந்தவித துணையும் போகக்கூடாது என்ற வேண்டுகோளை விடுப்பதோடு, இதை நிறுத்துவதற்கான நடைவடிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இஸ்மாயில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரசே சபை செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், நீர்வழங்கல் அதிகார சபையின் மட்டக்களப்பு  மாவட்ட உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .