2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'நிலை மாறு கால நீதி'யை வலியுறுத்தி மகளிர் தின நிகழ்வு

Kogilavani   / 2016 மார்ச் 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

'நிலை மாறு கால நீதி'யை வலியுறுத்தும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மட்டக்களப்பு பெண்கள் சமாசம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை, சனிக்கிழமை (12) பகல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் ஹோட்டலில் நடத்தின.

விழுது அமைப்பின் ஸ்தாபகரான அமரர் சாந்தி சச்சிதானந்தத்தின் நினைவேந்தல் சமர்ப்பணங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வை, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திட்ட உத்தியோகத்தர் பி.முரளிதரன் தலைமையேற்று நடத்தினார்.

இதில், சாந்தி சச்சிதானந்தம் தொடர்பான கருத்துக்களை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திருமலை மாவட்ட உத்தியோகத்தர் வ.ராஜ்குமார், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆலோசகர் ஜே.எஸ்.புஸ்பலதா ஆகியோர் வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் நிலை தொடர்பான அளிக்கையை அதன் தலைவி திருமதி பிறின்சி அருந்ததி ஜெயவேல் வழங்கினார்.

இதன்போது இலங்கை விதவைகளுக்கான தேசிய பட்டயம் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  அடுத்து, நிலை மாறு கால நீதியை வேண்டி நிற்கும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆலோசகர் ஜே.எஜ்.புஸ்பலதாவின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'வாழ்வாதாரமும் பொருளாதாரப் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் மதனா பாலகிருஸ்ணராஜ், 'சமூகப்பண்பாட்டுத் தடைகள்' என்ற தலைப்பில் மகேந்திரன் தங்கேஸ்வரி, 'வளங்கள், கல்வி மற்றும் அனுகூலங்களை அடைதல்' என்ற தலைப்பில் உம்.முகபீபா, 'பயம் இன்மையும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கவிதா இளங்கீரன், 'உணவு, சுகாதாரம் மற்றும் போசாக்கு' என்ற தலைப்பில் இராமச்சந்திரன் விஜயலக்ஸ்மி ஆகியோரும் பங்குகொண்டனர். இதன்போது பெண்கள், எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண நபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்  ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் செயலாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X