2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'பராமரிப்புக் காப்பகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கவும்'

Kogilavani   / 2016 மார்ச் 01 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'கிழக்கு மாகாணத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்புக் காப்பகம் ஒன்று இல்லாமையானது, மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. எனவே, அத்தகைய நிலையத்தை நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'விழி புலனற்றோர், காது கேளாத, வாய்பேச முடியாதவர்களையும் பராமரித்து கல்வியூட்ட, அவர்களுக்கென காப்பகங்களும் பராமரிப்புப் பாடசாலைகளும் உள்ளன.

அதேபோன்று கைவிடப்பட்ட வயோதிபர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களது நலனோம்பு  விடயங்களைக் கவனிப்பதற்காகவும் முதியோர் இல்லங்கள் உள்ளன,

கிழக்கு மாகாணத்திலே உள்ள பிரதான பிரச்சினை இப்பிராந்தியத்தில் 18 வயதிற்கு மேல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு ஒரு நிலையம் இல்லாதிருப்பதாகும். அத்தகைய மனநிலைப் பாதிப்புக்குள்ளானவர்களை   தெருக்களில் நடமாடுவதற்கே நாம் விட்டு வைத்துள்ளோம். இது ஒரு மனிதாபிமான மனித நேயப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்களை எங்கு வைத்துப் பராமரிப்பது என்பதில் சமூக சேவைப் பிரிவில் கடமையாற்றும் எமக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களை தெருக்களில் நடமாட விடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவர்கள், சிறுவர்களின் பார்வையில் படும்போது, சிறுவர்களுக்கு எதனை வெளிப்படுத்துகின்றோம் என்பதும் அவர்கள் எதனைக் கற்றுக் கொள்வார்கள் என்பதும் மனதை நெகிழ வைக்கின்றது.

இன்று சுக தேகியாகவும் புத்திஜீவியாகவும் இருக்கும் ஒருவர், விபத்தின் காரணமாக தலை அடிபட்டு பாதிப்பை எதிர்கொண்டால் அவரும் மனநோயாளிகலாம். அப்போது, அவரைப் பராமரிப்பதற்கு இடம் இல்லாததால் அவரும் தெருவிலேதான் அலைய வேண்டியிருக்கும்.

எனவே, அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், மனிதநேய செயற்பாட்டாளர்களும் இந்த விடயத்தில் துரிதமாகச் சிந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புக் காப்பகத்தை நிறுவ முழு முயற்சி எடுக்க வேண்;டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X