2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போதை மாத்திரைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும்  இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து அம்மாத்திரைகளையும் கைப்பற்றினர்.  

வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞரை பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவரிடம் 03 போதை மாத்திரைகள் இருந்தமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மாத்திரைகளுடன் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X