Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
போதைவஸ்;துப் பாவனையாளர்களை இனங்காண்பதற்காக கிராம மட்டங்களில் ஆய்வு நடவடிக்கையை சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என அத்திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டி.எச்.சன்னியசூரிய தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலுமுள்ள சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலாளர்களின் ஆலோசனையையும் வழிகாட்டலையும் பெற்று இந்த ஆய்வை மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறினார்.
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம், காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் தகவல்களை சமூக அறிக்கையாகத் தயாரித்து போதைவஸ்துப் பாவனையாளர்களின் குடும்பங்களில் எவ்வகையான பிரச்சினை இருக்கின்றது என்பதை அடையாளம் காண்பதுடன், சகல திணைக்களங்களின் உதவிகளையும் பெற்று அக்குடும்பங்களில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து அக்குடும்பங்களை முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, அந்தக் குடும்பங்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை சமூக அறிக்கையிலிருந்து பெற்று அவற்றைத் தீர்ப்பதற்கு வழிசெய்ய வேண்டும்' என்றார்.
'மேலும், போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுபடச்செய்து அவர்களை சமூகமயப்படுத்த சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது. போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையானவர்கள் கூடுதலான குற்றச்செயல்களை செய்கின்றவர்களாக உள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago