2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போயா தினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

போயா தினமான புதன்கிழமை (17) சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் 41 வயதுடைய பெண்ணொருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து சாராயத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  

இப்பெண் அவரது வீட்டில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பெண்னின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு 1860 மில்லிலீற்றர் சாராயம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X