Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 17 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர், மக்கள் குறைகளை தீர்ப்பதில் அசமந்தப் போக்காக உள்ளதாகவும் மக்களுக்கு கடமை செய்வதற்காகவே அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை பிரதேச சபை செயலாளர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றபோதே அவர் இதமை தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
" மீள்குடியேற்ற பகுதிகளில் யானை வேலி மற்றும் குரங்குளின் தொல்லை, பொது மின்விளக்குகள் அமைத்தல் தொடர்பாக கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அதிகமானவற்றை இன்றுவரை ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் நிறைவேற்றவில்லை என்று அறிய முடிகின்றது என்றும் அவருக்கு இங்கு கடமையாற்ற விருப்பமில்லாதவிடத்து வேறு பிரதேசங்களுக்கு கடமையாற்ற செல்வதற்கு தாங்கள் எதிர்ப்பில்லை.
பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடம்பெறும் கூட்டமாகும் அக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் தொடர்பாக அவர்களது திணைக்கள தலைவர்களுக்கும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கல்வி உயர் அதிகாரிகள் இவ்வாறான கூட்டத்திற்கு வருகைதராமல் இருப்பதும் வலய கல்வி அதிகாரிக்கு தெரியாமல் ஆசிரியர்கள் மாகாணத் திணைக்களத்தின் உதவியுடன் இடமாற்றம் பெற்றுச் செல்வதும் கல்வி பின்னடைவுக்கு காரணம்.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் 15ம் திகதி வரை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 292 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதுடன் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார திணைக்களத்துடன் இணைந்து அனைத்து திணைக்களங்களும் சமூக அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திவிநெகும திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டத்தில் 2800 மில்லியன் ரூபாய் பணத்தினை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்யாமல் இருப்பது கவலையான விடயம். திவிநெகும திணைக்களம் மக்களின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு கடன் திட்டங்களை வழங்குவதுடன் அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு தொழில்முயற்சிகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
9 hours ago