Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 01 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'எமது நாட்டில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மருத்துவத்துக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது. எனவே, மருத்துவ ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்' என புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள இரத்த வங்கிக்கு, குளிரூட்டிகள் மற்றும் வைத்தியசாலைக்கு தேவையான சக்கர நாற்காலிகள் என்பவற்றை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(29) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வருடம் அதிக நிதியை சுகாதார அமைச்சுக்கும் கல்வியமைச்சுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
மக்கள் மத்தியில் இருக்கின்ற சுகாதாரப் பிரச்சினையை அடையாளம் கண்டு, அவற்றை தீர்த்து வைப்பதோடு, அவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நிதியை பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
நமது நாட்டில் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. எனவே, வைத்திய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முடியுமான ஒத்துழைப்புக்களை தருவதற்கு நாம் ஆயத்தமாக உள்ளோம்' என்றார்.
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் உதவியுடன் இரண்டு குளிரூட்டிகள், ஏழு சக்கர நாற்காலிகள் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபர், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் டாக்டர் டி.எம்.மரீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
18 minute ago
2 hours ago