Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமானது எவரையும் பாதிக்காத வகையில் சாதகமான முடிவுகளை தருமென்று நம்புவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்தியகுழு உறுப்பினர்களுக்கான கூட்டம், காத்தான்குடியில் திங்கட்கிழமை (31) இரவு நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், ', என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் எமக்கு வாக்களித்துள்ளனர். அவர்களை உதாசீனம் செய்யமுடியாது. அவர்களுக்கு நடக்கின்ற அநியாயங்களுக்கு எதிராக செயற்படக்கூடிய பலமுடைய ஓர் அரசியல் அதிகார பலத்தை காத்தான்குடியில் எதிர்பார்க்கின்றனர்; என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கடந்த வாரம் நான் சந்தித்தபோது கூறியிருந்தேன்' என்றார்.
'மேலும், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் எமது கட்சி பெற்றதுடன், முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியையும் அதிகரிக்கச் செய்து இந்த மாவட்டத்துக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக்கொடுத்துள்ளது என்பது சிறந்த முறையில் புலப்படுகிறது. இதன் மூலம் எமக்கு சாதகமான நிலைமை தோன்றியுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
7 hours ago