Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சகோதர இனமாகிய முஸ்லிம்களை தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் எதிர்க்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது தீர்வுத்திட்டம் அமையும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் கோவில் முன்றலில் திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னெடுப்புகள் வரவேற்கத்தக்கன.' என்றார்.
'மேலும் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பேரவையின் நிலைப்பாடு பற்றி சற்றுச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளனர். ஒருவர் மூன்று அமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டு தீர்வுத்திட்டம் முன்வைப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. எமது தலைவர் இரா.சம்பந்தன் மிக மெதுமையாக தனது அரசியல் நகர்வை மேற்கொண்டு வருகின்றார். அவரின் வழியில் சென்று அரசியல் தீர்வைப் பெற முடியுமென்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
21 minute ago
2 hours ago