Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழுவின் பிரதித் தலைவர் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளும் நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளËகுடியமரும்போது, காணி ஆவணம்; உட்பட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சில அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகின்றனர். சில அதிகாரிகள் தங்களின் இலாபங்களுக்காக இத்தகைய இனத்துவ பார்வையை மேற்கொண்டு அப்பாவித் தமிழ், முஸ்லிம்; சிங்கள சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்றனர்
மிக அண்மையில் இம்மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட சகோதர இன மக்களுக்கு காணிகள், காணி ஆவணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டபோதும், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்திருந்த முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே, மாவட்டத்தில் விவசாயிகளும் தமது நிலங்களை இழக்க வேண்டியுள்ளது. உன்னிச்சை, உறுகாமம், காயன்குடா, பொத்தானை, கள்ளியங்காடு, கள்ளிச்சை, காரமுனை, ஜப்பார்த்திடல் போன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தீர்வின்றி வாழ்கின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு 2008ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் அகதிகளாக யாரும் இல்லை என்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டது என்றும் கடந்த அரசாங்கம் அறிக்கை விட்டிருந்தது. இதன் மூலம் நாட்டில் சுமுகமான சூழல் நிலவுவதாக காட்ட அப்போதைய அரசு முனைந்தது. அத்துடன் யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் அகதிகள் இரண்டு வகையினராக பிரிக்கப்பட்டு அண்மைக்கால அகதிகள், நீண்டகால அகதிகள் என வகைப்படுத்தப்பட்டனர். இவற்றில் நீண்டகால அகதிகளாக பெரும்பாலும் முஸ்லிம்களே காணப்பட்டனர். இவர்களுக்கான எந்தவொரு மீள்குடியேற்ற நடவடிக்கைகளோ, உரிய இழப்பீடுகளோ வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லை.
2008 கால மாவட்ட செயலக பதிவுகளில் உன்னிச்சை, உறுகாமம்;, கள்ளிச்சை மாத்திரமே மீள்குடியேற்றப்பட வேண்டிய கிராமமாக பட்டியலிடப்பட்டிருந்தன. இக்கிராமங்கள் கூட உரிய மீள்குடியேற்ற நடவடிக்கை இன்றி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று விவசாயிகள் கூட அதிகாரிகளின் இனத்துவேசத்தன்மையால் தமது வயல் நிலங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. யுத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில் ஐந்து ஏக்கர், ஐம்பது ஏக்கர், நுறு ஏக்கர் என காணி உரித்துடையவர்கள் இன்று இனத்துவம் பேசுகின்ற அதிகாரிகளினால் தமது காணிகளுக்கு வயற்காணிபதிவுகளை கூட எடுக்க முடியாமல் 2008களின் பின்னர் வந்த சுற்றுநிரூபங்களின் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு மாத்திரமே ஆவணம் பெறமுடியும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் தமது பரம்பரை பரம்பரையாக செய்துவந்த காணிகளைக்கூட இழக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு முற்பட்ட விவசாய காணிகளில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுகளாககாணப்படுகின்றன. இதனை துப்பரவு செய்து தமது நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முற்படுகின்றபோது பிரதேச செயலக அதிகாரிகளும், வன இலாகா பகுதியினரும் தடைகளை இட்டுவருகின்றனர் உதாரணமாக வெள்ளாமைச்சேனை என்ற பகுதியில் இந்நிலைமையினை தெளிவாக காணலாம் பெரும்பாலும் முஸ்லிம்; மீள்குடியேற்ற கிராமங்களில் இத்தகைய நிலை காணப்படுவது நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும். எனவே எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளில் குறிப்பிட்டது போன்று குறைந்தது அயல் காணி உரிமையாளரின் வாக்கு மூலத்தை வைத்தேயேனும் காணிகளை வழங்குவதற்கும், ஆவணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோன்று மைளந்தனை, வாகனேரி, சிப்பிமடு, புனானை போன்ற கிராமங்களை சேர்ந்த தமிழ் சிங்களச் சகோதர இனங்களும் மீள்குடியேற்றம் தொடர்பிலான பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பருந்துரைப்பிரகாரம் இவர்களது பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கான பொறிமுறையினை மேற்கொள்ள வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகளை விரைவில் விடுவிப்பதற்கான நீதிப்பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறே தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மீதான விசாரணை துரிதப்படுத்துவதற்கான விசேட நீதிப்பொறிமுறை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. இதன் மூலமே நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியும்' என்றார்;.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago