Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வி.சுகிர்தகுமார்
இலங்கையில் அன்று 28 சதவீதமாக காணப்பட்ட வறுமை நிலைமை, தற்போது 6.7 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன தெரிவித்தார்.
தேசிய மட்டத்திலான வறுமை நிலைமை 6.7 சதவீதமாக குறைவடைந்தபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலைமை அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் சனிக்கிழமை (06) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சமுர்த்தி வேலைத்திட்டம் 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, இலங்கையின் வறுமை நிலை 28 சதவீதமாக இருந்தது. தற்போது அது 6.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதற்குக் காரணம் சமுர்த்தித் திட்டமான வறுமை ஒழிப்புத் திட்டமாகும்' என்றார்.
'மேலும், யுத்தத்தின் பின்னரான தற்போதைய சமாதான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து வறுமை நிலைமையைக் குறைக்க வேண்டும்.
வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தில் 143 பில்லியன் ரூபாய் நிதி மூலதனமாக உள்ளது. இந்த நிதி சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சேமித்த பணமாகும்.
இலங்கையில் 18 இலட்சம் பேர் விசேட தேவையுடையோர்களாக காணப்படுகின்றனர். இந்தப்பிரதேசங்களில் விஷேட தேவையுடையோர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவதற்காக வலது குறைந்தோருக்கான செயலகம் இருக்கின்றது' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago