Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்க பாடுபாட வேண்டும் என வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தில் முகாமையாளர்களாகவும் உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றுகின்றனர்.
இவர்களின் சம்பளத்துக்கு மாதமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவர்கள் மக்களின் வறுமையை தனிப்பதற்காக முழுமையாக பாடுபட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதலிடம் என்பதால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வறுமையை ஒழிப்பதற்காக கூடுதலான நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது.
வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த காலங்களில் பல குடும்பங்களுக்கு மானியமாக பல மில்லியன் ரூபாய் நிதி உதவிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், கடந்த வருடம் 45 மில்லியன் ரூபாய் நிதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உதவிகள் மானியமாக இத் திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்த வருடமும் இதற்காக 87 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக குடும்பங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில்,90 வீத மானியம், 40 வீத மானியம் என்ற திட்டத்தின் கீழ் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago