Suganthini Ratnam / 2016 நவம்பர் 25 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, நாவற்குடாப் பிரதேசத்தில் வீட்டுத்திட்டத்துக்காகப் பதிவுசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 11 குடும்பங்களையும் மீண்டும் அவ்வீட்டுத்திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்;கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பறூக், இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வீடுகள் வழங்கப்படுவதற்காக நாவற்குடாப் பிரதேசத்தில் மொத்தம் 39 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டன. இவற்றில் 11;; குடும்பங்கள் அவ்வீட்டுத்திட்டத்துக்காகப் பதிவுசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.
இவ்வாறு நீக்கப்பட்ட அக்குடும்பங்களைச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு வீடுகளைத் திருத்துவதற்காக 200,000 ரூபாய் மீள்குடியேற்ற அமைச்சால்; வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகரக்கொட்டில்களில் வசிக்கும் அக்குடும்பங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறினர்.
இப்பிரதேசத்தில் இவ்வீட்டத்துக்காக பதிவுசெய்யப்பட்ட 39 குடும்பங்களைத் தவிர, மேலதிகமாக 21 குடும்பங்களுக்கு வீட்டு வசதி தேவைப்படுதாகவும் இக்குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் நேற்று வியாழக்கிழமை மாலை தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர், 21 குடும்பங்களின் நிலைமையையும் அவதானித்து, வீட்டுத்திட்டம் தேவைப்படுவோரை மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
6 minute ago
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
16 minute ago