2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வேப்பமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு வாகனமொன்றில் வேப்பமரக் குற்றிகளை கடத்திய குற்றச்சாட்டில்  அவ்வாகனச் சாரதியை (வயது 38) கைதுசெய்துள்ளதுடன், அம்மரக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.   

இம்மரக் குற்றிகள் கடத்தல் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று மறைந்திருந்திருந்ததாகவும் இதன்போது, வாகனமொன்றில் கடத்திக் கொண்டுவரப்பட்ட  பெறுமதியான 6 அடி நீளம் கொண்ட 15 மரக்குற்றிகளை வாகனத்துடன் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரக்குற்றிகள் ஓட்டமாவடியிலுள்ள மரக்காலைக்கு தளபாடங்கள் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X