2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'விவசாயக்கடன் வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

விவசாயிகளுக்கு விவசாயக்கடன் வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்துவதன் மூலம், இடைத்தரகர்கள் மற்றும் பணம் சேர்ப்பவர்களிடம் விவசாயிகள் சிக்கித் தவிக்கும் நிலையை இல்லாமல்ச் செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டுமென  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்;; தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் அக்கறையின்மையாக உள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகளால்  தெரிவிக்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'விவசாயிகளுக்கான கடனை வங்கிகள் உரிய நேரத்துக்கு வழங்க வேண்டும். இந்தக் கடனுக்கு விவசாயிகளிடமிருந்து 7 சதவீத வட்டி அறவிடப்படுகின்றது. இதேவேளை, 8 சதவீத வட்டி வங்கிகளுக்கு மத்திய வங்கியால் வழங்கப்படுகின்றது. இந்த பிரயோசனத்தை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும்' என்றார்.

'மேலும், வர்த்தக நிறுவனங்கள் போன்று வங்கிகள் செயற்பட முடியாது. கடனை விவசாயிகள்  செலுத்தவில்லை, அறவிடுவதில் பிரச்சினை என்று தெரிவிப்பதை நிறுத்தவேண்டும். எவ்வாறு கடனை இலகுவாகப் பெற்றுக்கொள்வது,  எவ்வாறு கடனை  மீளச் செலுத்துவது உள்ளிட்டவை தொடர்பிலேயே விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறைந்தளவான் விவசாயிகளுக்கே வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மத்திய வங்கியால் வழங்கப்படுகின்ற அனுகூலங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X