2026 மே 06, புதன்கிழமை

சர்வதேச அல் - குர்ஆன் போட்டிக்காக இலங்கையிலிருந்து 10 பேர் தெரிவு

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சர்வதேச அல் - குர்ஆன் போட்டிகளில் இலங்கையிலிருந்து 10 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் நடைபெற்ற அல் - குர்ஆன் போட்டிகளில் வெற்றியீட்டிய 10 மாணவர்களே சர்வதேச அல் - குர்ஆன் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசய மட்டத்திலான அல் - குர்ஆன் போட்டிகள் இந்த வருடம் காத்தான்குடியில் நடைபெற்றது. இந்த போட்டி முடிவுகள் பின்வருமாறு


பெண்களுக்கான கிறாஅத் போட்டி (கனிஷ்ட பிரிவு)

முதலாமிடம்    - எப்.பாத்திமா ஸாஜிதா (தாறுஸ்தக்வா மதரசா கொழும்பு 12)
இரண்டாமிடம் - கே.பாத்திமா பக்கீனா (ஜாமியுஸ் ஸித்தீக்கியா அறபுக்கல்லூரி, காத்தான்குடி)
மூன்றாமிடம்  - எம்.என்.எப்.றிஸ்லா (பெண்கள் அறபுக் கல்லூரி கல்லெலிய)
 
பெண்களுக்கான கிறாஅத் போட்டி (சிரேஷ்ட பிரிவு)

முதலாமிடம்  - எம்.யு.எஸ்.சனிறா     (திஹாரியா)
இரண்டாமிடம்   - எச்.கே.ஆர்.வஜீஹா   (கொழும்பு 12)
மூன்றாமிடம்    - வஸனி அமால்      (கொழும்பு12)

கிறாஅத் போட்டி ஆண்கள் (கணிஷ்ட பிரிவு)

முதலாமிடம்  - எம்.ஆர்.எம்.றஸ்மின் (தம்பதெனிய)
இரண்டாமிடம்  - எம்.ஐ.எம்.அஸ்பாக் (அக்குறனை)
மூன்றாமிடம்   - எம்.எஸ்.சிகாப் அக்கீல்ஸ் (ஜாமியத்துல் றஹ்மானிய்யா அக்குறனை)
 
கிறாஅத் போட்டி ஆண்கள் (சிரேஷ்ட பிரிவு)

முதலாமிடம்  - எம்.அமீர் ஹுஸைன் (ஹிந்தோட்ட காலி)
இரண்டாமிடம் - எம்.எச்.முன்சிப் (அக்குறனை)
மூன்றாமிடம் - ஏ.எல்.முஸம்மில் (வாழைச்சேனை)

குர்ஆன் மனனப்போட்டி ஆண்கள் (கனிஷ்ட பிரிவு)

முதாலமிடம்  - ஏ.எச்.எம்.அர்க்கம் (கிருளப்பன)
இரண்டாமிடம்  - எம்.ஏ.உமர் (கொழும்பு 02)
மூன்றாமிடம் - முகம்மட் லாபிர் (மாவனல்ல)

குர்ஆன் மனனப்போட்டி ஆண்கள் (சிரேஷ்ட பிரிவு)


முதலாமிடம் - எம்.எம்.யூசுப் (தஸ்கர கண்டி)
இரண்டாமிடம் - கே.எம்.யாசீர் (அத்துளுகம)
மூன்றாமிடம் - எம்.யு.எம்.அஸீம் (ஹனகின்ன)

குர்ஆன் மனனப்போட்டி (பெண்கள்)
முதாலமிடம் - எஸ்.றஸானா (ஏறாவூர்)
இரண்டாமிடம் - இசட்.எப்.சம்ஹரீரா  (ஏறாவூர்)
மூன்றாமிடம் - ஏம்.சித்தீக்கா பர்வீன் (கற்பிட்டி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .