2025 மே 01, வியாழக்கிழமை

தேசிய மீன் உற்பத்தியில் மட்டு.மாவட்டம் 9 வீத பங்களிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டம் தேசிய மீன் உற்பத்தியில் 9 வீதம் பங்களிப்புச் செய்துள்ளதுடன், கடந்த வருடத்தினை விடவும் மாவட்ட மீன் உற்பத்தி 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளர் ரீ.ஜோர்ஜ்; தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்த வருடத்தின் ஜனவரி முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் மாதாந்தம் சராரியாக 4ஆயிரம் மெட்ரிக்தொன் மீன்கள் பிடிபட்டுள்ளன. இதுவரை 45ஆயிரம் மெட்;ரிக்தொன் மீன் உற்பத்தி; மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளி 23672 மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்த 25159 பேர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இந்த மீன்பிடியாளர்களால் 86372 பேர் நேரடிப் பயனாளர்களாக உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்ளும், 70 ஒரு நாள் இயந்திரப்படகுகளும் அடங்கலாக 1693 இயந்திரப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .