2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழாய் குடிநீர்த் திட்டத்துக்கு 1700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட படுவான்கரை மற்றும்  கன்னன்குடா பகுதிக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கான வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.

வவுணதீவு கன்னன்குடாப் பிரதேசத்திலுள்ள 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அம்பாறை மற்றும் உன்னிச்சை பகுதியில் இருந்து  குழாய் வழியாக குடிநீர் விநியோகத்திற்கான வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் குடிநீர் குழாய் பதிப்பு வேலைத் திட்டங்களை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்டப் பணிப்பாளர் வினோ, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பி. ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X