2025 மே 01, வியாழக்கிழமை

பெண்கள் அபிவிருத்தி சங்கங்களுக்கு 238 இலட்சம் நிதி

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவஅச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அபிவிருத்தி சங்கங்களுக்கு 238 இலட்சம் ரூபா நிதி; வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மாதர் அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 238 சங்கங்களுக்கு இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 46 மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(24) காலை  நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மாதர் அபிவிருத்தி சங்கங்கள் தமது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு எவ்வாறான நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பது தொடர்பில் விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .