2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கற்கைநெறிகள் ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தற்போது பரிட்சை எழுதிக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மூன்று விசேட பயிற்சி நெறி மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது என தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கணினி வன்பொருள், அலுமீனியம் பொருத்துதல், 720 மணித்தியாலங்கள்; கொண்ட ஆங்கில பயிற்சி நெறி ஆகிய பயிற்சி நெறிகளே இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.

கணினி வன்பொருள் பயிற்சிநெறிக்கு தோற்றும் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அலுமினியம் பொருத்துதல் பயிற்சிநெறிக்கும் தோற்றும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு சித்தியடைந்திருத்தல் போதுமானது. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்காகவும் தொழிலைத் தேடும் மாணவர்களுக்காகவும் 720 மணித்தியாலம் கொண்ட ஆங்கில பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

கற்கைநெறியை தொடரும் காலத்தில் மாதாந்தம் 1000 ரூபாய் கொடுப்பனவும் அரை மானியத்துடனான போக்குவரத்துக்கான பருவகால சீட்டும் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கல்லூரி அதிபர் விண்ணப்பதாரிகளை கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X