2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்திலிருந்து 488 வீடுகள் கிடைத்துள்ளன: வில்வரெத்தினம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்   

போரதீவுப் பற்று பிரதேசத்துக்கு மாத்திரம் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 488 வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.

போரதீவுப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிருத்திக் குழுத் தலைவரும் மிள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியில் போரதீவுப் பற்று பிரசேத்துக்கு 488 வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் இப்பிரதேசத்திலுள்ள றாணமடு கிராமத்துக்கு 48 வீடுகளும், மாலையர்கட்டு கிராமத்துக்கு 45 வீடுகளும், செல்வாபுரம் கிராமத்துக்கு 119 வீடுகளும், வம்மியடியூற்று கிராமத்துக்கு 125 வீடுகளும், பாலையடிவட்டைக் கிராமத்துக்கு 52 வீடுகளும், பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து இந்தியா மற்றும் வன்னி பிரதேசத்திலும் மீண்டும் இப்பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள 99 பேருக்கும் இவ்வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ஒரு வீட்டின் பெறுமதி ஐந்தரை லட்சம் ரூபாய் எனவும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெத்திம் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X