2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் 2ஆவது ஆண்டு பூர்த்தி ஆராதனை

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மறைமாவட்டம் புதிய மறைமாவட்டமாக உதயமாகி இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் ஆயர் பேரருள் திரு கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையிலான ஆராதனை வியாழக்கிழமை (03) மாலை நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் முதல் மட்டக்களப்பின் வாகரை வரையுள்ள பங்குத் தேவாலயங்களின் பங்குத்தந்தைகள், இறைமக்கள், அருட் சகோதரிகள். எனப்பலரும் இந்; நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பேராலயத்தில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு பொன்னையா யோசப் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார். இதில், மு10குரு முதல்வர் எப்.எக்ஸ் டயஸ், அருட்தந்தைகளான அம்புறோஸ், போல் சற்குணநாயகம், ஜே.எஸ்.மொறாயஸ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.

மறைக்கல்வி நடு நிலையத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான இந் நிகழ்வில், அருட்தந்தைகளான எஸ்.யூலியன், கிறைட்டன் அவுட்ஸ்கோஸ், எகெட் கரித்தாஸ் நிறுவக ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டதையடுத்து மட்டக்களப்பு சார்ளஸ் மண்டபத்தில் மறைமாவட்டத்தின் இரண்டாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக ஆயர், குரு முதல்வர் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டம் 2012ஆம் ஆண்டு யூலை மாதம் 03ஆம்திகதி புதிய மறைமாவட்டமாக பாப்பரசரால் பிரகடனப்படுத்தப்பட்டிது. அதற்கு முன்னர் மட்டக்களப்பு திருமலை மறைமாவட்டங்கள் இரண்டும் ஒன்றாகவே செயற்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X