2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட். நூலகங்களுக்கு ரூ.28 இலட்சம் ஒதுக்கீடு

George   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில உள்ள இரண்டு நூலகங்களை அபிவிருத்தி செய்வதற்காக 28 இலட்சம் ரூபாய் நிதியினை, ஊக்குவிப்பு உற்பத்தி திறன்விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஒதுக்கியுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இத் திட்டத்தின் கீழ், ஏறாவூர் பசீர் சேகுதாவூத் பொது நூலகத்திற்கு இருபது இலட்சம் ரூபாவும், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பசீர் சேகுதாவூத் பொது நூலகத்திற்கு எட்டு இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X