2025 மே 03, சனிக்கிழமை

இடைவிலகல் மாணவர்கள் 35 பேர் பாடசாலையில் இணைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலையிலிருந்து இடைவிலகிய 35 மாணவர்கள் மீண்டும் தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலய அதிபர் எஸ்.ரமேஸ்கலைச் செல்வன் தெரிவித்தார்.

தன்னாமுனை மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலுள்ள மாணவர்களே இவ்வாறு மீண்டும் வளனார் மகா வித்தியாலத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்ற 35 மாணவர்கள் இடைவிலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலுள்ள பாடசாலை வரவுக்குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநி ஜோசப் பொன்னையா மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் மேற்படி 35 மாணவர்களும் பாடசாலைகயில் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி கற்க வேண்டிய வயதில் தாய் தந்தையரால் வீட்டில் வேலை செய்ய பணிக்கப்பட்டமை, வயல் வேலைகளுக்கு அனுப்பப்பட்டமை, தொழில்செய்ய அனுமதிக்கப்பட்டமை,  தாய் வெளிநாட்டில் தொழில் புரிய சென்றமை போன்ற காரணங்களால் இந்த மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மீள இணைக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதுடன் கற்றல் நடவடிக்கையில் இம்மாணவர்கள் ஆர்வம் காட்டிவருவதாக பாடாசலையின் அதிபர் எஸ்.ரமேஸ் கலைச்செல்வன் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X