2025 மே 05, திங்கட்கிழமை

உரிமைகள் தொடர்பில் 700 சிறுவர்களுக்கு அறிவுறுத்தல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில், சிறுவர்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 700 சிறுவர்கள் சிறுவர் உரிமை தொடர்பாக தெரிந்து வைத்திருப்பதாக மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிபர் ஒன்றியத்தின் திட்ட இணைப்பாளர் கே.எஸ்.பற்றிக் தெரிவித்தார்.

சிறுவர் உரிமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிபர் ஒன்றியத்தினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் 'மாமங்க மழலையகம்' எனும் திட்டத்தின் கீழ் இவ் ஆய்;வு மேற்கொள்ளப்பட்டதாக திட்ட இணைப்பாளர் கே.எஸ்.பற்றிக் மேலும்; தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'இவ் ஆய்வுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட  வினாகொத்துக்கள் 1500 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.
இவ் வினாக்கொத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 700 சிறுவர்கள் சரியான விடைகளை வழங்கியிருந்தன் மூலம் இச் சிறுவர்கள் சிறுவர் உரிமை தொடர்பாக தெளிவான அறிவை பெற்றுள்ளார்கள் என்பதை விளங்க முடிகின்றது.

இந்த வினாக்கொத்தில் சிறுவர் உரிமை கோட்பாட்டின் ஸ்தாபகர் யார், சிறுவர் உரிமை சமவாயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு, சிறுவர்கள் என்பவர்கள் யார், சிறுவர் தினம் எப்போது போன்ற சிறுவர்கள் தொடர்பான 12 வினாக்கள் வழங்கப்பட்டிருந்தன. 

அத்தோடு சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புனர்வு நடவடிக்கைகளும் இதன்போது மேற்கொள்ளப்பட்டன' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X