2026 மே 06, புதன்கிழமை

சு.கவுக்கு மட்டு.மாவட்டத்தில் 14 பிரதேச இணைப்பாளர்கள் நியமனம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

ஸ்ரீலங்கா சதந்திர கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலிலும் இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பற்று பிரதேச இணைப்பாளராக கே.சாகீசனும் மட்டக்கனளப்பு மண்முனை வடக்கு இணைப்பாளராக தட்சணாமூர்த்தி மகிழ்நம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய இணைப்பாளர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .