2025 மே 02, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிக்கு 140 ஆயிரம் ரூபாய் நிதியுதவி

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூரிலுள்ள இரண்டு முன்பள்ளிகளின் பௌதீக வளங்களை மேம்படுத்த கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அமைச்சர் நஸீர் அஹமட் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாக   இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன் பாபா ஞாயிற்றுக்கிழமை (6) தெரிவித்தார்.

ஏறாவூர் - ஹிஸ்புல்லாஹ் கிராமம் அல்-அஷ்ரப் முன்பள்ளிக்கு 65000; ரூபாவும் றிபாய் பள்ளி வீதி பாத்திமா பாலர் பாடசாலைக்கு 75000 ரூபாவுமாக மொத்தம் 140000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியைக் கொண்டு பாலர் பாடசாலைக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன் பாபா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X