2025 மே 01, வியாழக்கிழமை

ஏறாவூரில் உணவு ஒவ்வாமையால் 20 மாணவர்கள் சுகவீனம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 21 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உணவு ஒவ்வாமையால் திடீர் சுகவீனமடைந்த ஏறாவூர் றஹ்மானிய்யா வித்தியாலயத்தைச் சேர்ந்த  20 மாணவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை   அனுமதிக்கப்பட்டனர் என ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, டாக்டர் எம்.ஏ.சி.உம்.பளீல் தெரிவித்தார்.

மாணவர்களில் இருவர் வாந்தியெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அப்பாடசாலைக்கு வந்த  ஏறாவூர் சுகாதார வைத்திய  அதிகாரி, டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் சிற்றுண்டிச்சாலையை பரிசோதித்து விட்டு  சிற்றுண்டிச்சாலையை மூடுமாறும் பணித்ததுடன் உணவு மாதிரிகளை பொரளையிலுள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்புவதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கேள்விப்பட்ட  ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத், ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு  மாணவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .