2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆதரவற்ற 214 சிறுவர்களுக்கு கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில்  ஆதரவற்ற 214 சிறுவர்களின் கல்விக்காக மாதாந்தக் கொடுப்பனவை தமது நிறுவனம் வழங்கிவருவதாக முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி எம்.ஏ.எம்.அஸ்மி இன்று புதன்கிழமை (27) தெரிவித்தார்.

தமது பெற்றோர் இருவரையோ அல்லது குடும்பத்தில் தலைமை தாங்கும் பிரதான உழைப்பாளியையோ இழந்து அநாதரவாக உள்ள சிறுவர்களுக்கு தலா 4,500 ரூபாய் படி இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 70 சிறுவர்களுக்கும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில்  82 சிறுவர்களுக்கும்  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 32 சிறுவர்களுக்கும் மொனராகலையிலுள்ள 30 சிறுவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இவர்களின் உயர் கல்விவரை இந்தக் கொடுப்பனவு தொடர்ந்து கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X