Menaka Mookandi / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 245 மில்லியன் ரூபாய் செலவில் 1,280 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இந்த வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாநாடு, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத்தலைவர் கே.ஜெகநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஜனசெவன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீடுகள் அன்பளிப்பு, மானியம் மற்றும் கடன் போன்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago