2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

26 இணக்கசபை அங்கத்தவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 26 இணக்கசபை அங்கத்தவர்களுக்கான  இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது.

இலங்கையில் உள்ள 75 இலவச சட்ட உதவி ஆணைக்குழு நிலையங்களில் சட்ட உதவியை நாடும் மக்களுக்கு இலவசத் தகவல், சட்ட ஆலோசனை, பரிந்துரை மூலம் நீடித்து நிலைக்கும் தீர்வு வழங்குதல் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

15,000 ரூபாய்க்கு உட்பட்ட வேதனம் பெறும் அரச ஊழியர்களும் இந்த  உதவிகளைப் பெறமுடியும் என இலவச சட்ட உதவி ஆணைக்குழு மட்டக்களப்பு நிலையத்தின் சட்ட உத்தியோகஸ்தர் மிருதினி சிவகுமார் தெரிவித்தார்.

அடிப்படை மனித உரிமைகள், நீதிமன்ற நடைமுறைகள், வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான சட்ட ஆலோசனை, இணக்கசபை அங்கத்தவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான தீர்வுகளும் ஆராயப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு நிலையத்தின் சட்ட உத்தியோகத்தர் கமலிற்றா சசிரூபன், திட்ட உத்தியோகத்தர் இ.அருள்மொழி ஆகியோர் விளக்கமளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X