2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீனவர் வலையில் 35,000 கிலோகிராம் நெத்தலி மீன்

George   / 2014 செப்டெம்பர் 23 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு களுதாவளை பிரதேச கடற்கரையில் திங்கட்கிழமை (22) 35,000 கிலோகிராம் நெத்தலி மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை பிரதேச கடலுக்கு பத்து கரைவலைத் தேணிகளில் சென்றவர்களே இம்மீன்களை பிடித்துள்ளனர்.

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது தோணிகள் போதாமையால், அயல் கிரமமான தேற்றாத்தீவுக் கிராமத்திலிருந்து இரண்டு தோணிகள் கொண்டுவரப்பட்டு இம்மீன்கள் பிடிக்கப்பட்டதாக, கரைவலைத்தோணி உரிமையாளரும் களுதாவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான செல்லையா இராமலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இந்த மீன்பிடி தொழிலுக்கு வந்து 35 வருடங்கள் கடந்து விட்டன. இதுவரை காலமும் இவ்வளவு கூடுதலான தொகை நெத்தலி மீன்கள் பிடிபடவில்லை. இதுதான் முதல் தடைவயெனவும் அனைத்தும் கலப்பற்ற தனி நெத்தலி மீன்கள் எனவும் தெரிவித்தார்.

மீன்கள் பிடிக்கப்பட்டதனை அடுத்து மீன் வியாபாரிகள்  பலபாகங்களிலும் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் குளிரூட்டி வாகனங்கள் மூலம் வருகைதந்து மொத்தமாக மீன்களை ஒரு கிலோ மீன் 125 ரூபாய் என்ற வீதத்தில் கொள்வனவு செய்யப்பட்டு, அனைத்தும் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

வியாபாரிகளினால் கை விடப்பட்ட 2500 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் உப்பிட்டு கடற்கரையிலேயே கருவாடு போடப்பட்டுள்தா அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X