2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கடல் அட்டை பிடித்த 4 மீனவர்களுக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

பாசிக்குடா கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 04 மீனவர்களை தலா 100,000 ரூபா பெறுமதியான  சரீரப் பிணையில் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் முஹமட் இஸ்மயில் முகமட் ரிஸ்வி திங்கட்கிழமை (07) விடுவித்துள்ளார்.

அத்துடன்,  இம்மீனவர்களை மீண்டும் செவ்வாய்க்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இம்மீனவர்களை ரோந்து நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்த கடற்படையினர்  திங்கட்கிழமை (07) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்திருந்ததாக  கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் இவர்களிடமிருந்து 08 சிலிண்டர்கள், ஒரு படகு இயந்திரம், ஒரு  ஜி.பி.எஸ் கருவி, சுழியோடுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள்,
ஆடைகள்,  கடல் அட்டைகள்  ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X