2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் 4 பேர் காயம்; எருமை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளை மதகடியில்  இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை  இடம்பெற்ற  விபத்தில்  படுகாயமடைந்த 04  பேர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது எருமை மாடு ஒன்று உயிரிழந்ததாகவும்   பொலிஸார் தெரிவித்தனர்.

மரப்பாலம் கிராமத்தில் இன்றையதினம் (11) அதிகாலை  காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி  ஜோசப் நாகம்மா (வயது 65) என்பவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இவரது  வவுணதீவிலுள்ள உறவினர்கள் எல்ப் ரக  வாகனம் ஒன்றில் மரப்பாலம் கிராமத்துக்கு வந்துகொண்டிருந்தபோதுஇ மேற்படி பகுதியில் வீதிக்கு குறுக்கே பாய்ந்த எருமையுடன் வாகனம் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

அன்ரனி மரியதாஸ் (வயது 30), அன்ரனி மனோரஞ்சிதம் (வயது 55), இந்திரநாதன் மனோன்மணி (வயது 52),  சதாசிவம் இந்திரநாதன் (வயது 56) ஆகியோர் காயமடைந்ததாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கே.சுகுமார் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X