2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்பத்துறையில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'காத்தான்குடி அல் மனார் தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றமை எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்;' என காத்தான்குடி அல்மனார் அறிவியியற் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நௌசாத் புதன்கிழமை(27) தெரிவித்தார்.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று தொழில்நுட்பத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை சமாளிக்க மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே அல் மனார் நிறுவன கல்வி கலாசார சமூக பிரிவானது வருமானத்தினை நோக்காகக் கொள்ளாது பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்;தவகையில் தொழில்நுட்ப பாடத்துறையை தெரிவுசெய்துள்ளோம்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X