2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாளாந்தம் 40,000 லீட்டர் குடிநீர் விநியோகம்

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு,  மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் மூலம் அப்பிரதேச மக்களுக்கு நாளாந்தம் 40,000 லீட்டர் குடிநீர்  வழங்கப்பட்டு வருவதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் வரட்சியினால் 75 வீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாடசாலைகள், சிகிச்சை நிலையங்கள் என்பவற்றிற்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையிலுள்ள இரு பெரிய நீர்  தாங்கிகள் மூலம், குடிநீர் எடுத்து வரப்பட்டு 42 சிறிய தாங்கிகள் மூலமாக குடிநீர் வழங்கப்படு வருவதாகவும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X