2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் ரூ.45 மில்லியன் செலவில் அபிவிருத்தி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்ககளப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச எல்லைக்குள் 45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்திற்கு ஒரு வேலைத்திடத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் கூறினார்.

இதனைவிட பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகள் மூலமும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரனின் விசேட திட்டத்தின் கீழும் மேலும் 100 செயற்றிட்டங்கள் இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.

இத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வருகின்ற ஒன்றரை மாதத்திற்குள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் இவை அனைத்திற்கும் இப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X