2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கில் சுழல் காற்று; 72 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மதுரங்குளம் கிராமத்திலும்  கிரிமிச்சைக் கிராமத்திலும்  வீசிய சுழல்காற்றினால் 72  வீடுகள் சேதமடைந்துள்ளன.  

மதுரங்குளம் கிராமத்தில்  வீசிய சுழல்காற்றினால் 49 வீடுகள் சேதமடைந்துள்ளதாக  மதுரங்குளம் கிராம அலுவலகர் சீ.கஜேந்திரன் தெரிவித்தார். மதுரங்குளம் கிராமத்தில்  06 வீடுகள் முழுமையாகவும்  43 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கிரிமிச்சைக் கிராமத்தில்  வீசிய சுழல்காற்றினால் 23   வீடுகள் சேதமடைந்துள்ளன

மதுரங்குளம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்ததுடன், பலத்த  காற்று வீசியதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டுக் கூரைகளுக்கு இடப்பட்டிருந்த தகரங்களும் ஓடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவியளிப்பதற்கான நடவடிக்கையை கோறளை வடக்கு பிரதேச செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் மதுரங்குளம் கிராம அலுவலகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X