2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 5,000 விண்ணப்பங்கள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இதுவரை 5,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் டி.ஆர்.கெலி இன்று திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் இந்த விண்ணப்பங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இதுவரை சுமார் 500 பேரிடம் ஆணைக்குழு விசாரணை செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கிரான், செங்கலடி மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆணைக்குழு அமர்வுகளை நடாத்தி விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X